சுப்ரமணியபுரம் படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது – வாய்ப்பை தவறவிட்ட வருத்தத்தில் பிரபல நடிகர்..!

Author: Vignesh
7 March 2023, 10:30 am

தமிழ் சினிமாவில், இயக்குனர் அமீர் பருத்திவீரன் என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர். பருத்திவீரன் படத்தை அமீர் எடுத்துக் கொண்டிருந்தபோதே, சுப்பிரமணியபுரம் படத்தை தயாரிப்பதாக சொல்லப்பட்டு இருந்தது.

ஆனால், சில காரணங்களால் சுப்பிரமணியபுரம் படத்தை இயக்குனர் அமீர் தயாரிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு நடிகரும், இயக்குனருமான சசிகுமாரிடம் சென்று உள்ளது.

director amir - updatenews360

இது குறித்து பேட்டியில் பேசிய அமீர், சுப்பிரமணியபுரம் படத்தில் இதற்கு முன்பு நடிக்க இருந்தது நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனு என்றும், ஆனால் அப்போது, சாந்தனு வேறு ஒரு தயாரிப்பாளரிடம் முன்பணம் வாங்கி விட்டதால் இதில் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

subramaniapuram - updatenews360

சுப்பிரமணியபுரம் பட வாய்ப்பை விட்டதை நினைத்து சாந்தனுவருத்தப்பட்டதாக, அதன் பிறகு, இதில் நடிகர் ஜெய்யை கமிட் செய்து, சசிகுமார் நடித்து சுப்பிரமணியபுரம் படம் உருவானது. படம் உருவான பிறகு, சசிகுமார் இதை போட்டுக்காட்ட, மொத்த படத்தையும் பார்த்து நானே மிரண்டு போய் விட்டேன் என அமீர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

shanthanu - updatenews360
  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்