திமுக ஆட்சியை கவிழ்க்க சதி… இந்தியாவை காப்பாற்ற இத மட்டும் செய்யுங்க : முதலமைச்சர் ஸ்டாலின் பரபர பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan7 March 2023, 12:48 pm
நாகர்கோவிலில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி முழு உருவ சிலை திறப்பு விழாவில் பேசிய அவர் , சாதி கலவரம் , மத கலவரத்தை தூண்டலாமா என சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.
நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள் . மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தலாமா என சிலர் திட்டமிட்டு காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களை விளம்பரப்படுத்த அவர்கள் நம் மீது விமர்சனத்தை வைக்கின்றனர் . நாட்டைக் காப்பற்ற வேண்டும் என்றால், மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று கூறி வருகிறேன்.
அதை நீங்கள் செய்தால், மக்களை மட்டுமல்லாமல், இந்தியாவையும் காப்பாற்ற முடியும். உங்களிள் ஒத்துழைப்புடன் பணியை தொடர போகிறேன் . என தெரிவித்தார்.