இந்த பூனையும் பால் குடிக்குமா? அத பண்ணிட்டு பிரபு தேவாவுக்கு டாட்டா காட்டிய மீனா!

Author: Shree
8 March 2023, 9:16 am

அழகான, பவ்யமான, அமைதியான நடிகையாக தமிழில் சினிமாவில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தொடர்ந்து ரஜினி , கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயர் வாங்கிய மீனாவை ஒருதலையாக காதலித்த நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால், மீனா யாரையும் காதலிக்கவில்லை என நாம் எல்லோரும் நினைத்திருக்கிறோம்.

அது உண்மையில்லையாம். ஆம், 2000ம் ஆண்டு வெளியான பிரபு தேவாவின் டபுள்ஸ் என்ற படத்தில் நடிகை மீனா ஹீரோயினாக நடித்தபோது பிரபு தேவாவின் மேனரிசத்தில் மயங்கி அவரை காதலிக்க துவங்கிவிட்டாராம். படத்தில் கூட நெருக்கமாக நடித்து அதன் வெளிப்பாடுகள் தெரிந்ததாம்.

ஆனால், பிரபுதேவா பல நடிகைகளுடன் இப்படிதான் பழகி வருகிறார் என தோழி நடிகைகள் மீனாவுக்கு கூற உடனே டாட்டா காட்டிவிட்டு அடுத்தப்படத்தில் அமைதியாக கவனம் செலுத்தி எஸ்கேப் ஆகிவிட்டாராம். பவ்யமான மூஞ்ச வச்சிட்டு இப்படி ஒரு வேலை பண்ணியிருக்காங்க மீனா. நேற்று நடிகை மீனா 40 ஆண்டு சினிமாவை நிறைவு செய்ததை ரஜினி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

  • no individual is bigger than the sport tweet by vishnu vishal கிரிக்கெட்டை விட தனிநபர் பெரியவர் அல்ல- CSK அணியை விளாசிய விஷ்ணு விஷால்