தலைமுடி கொட்டிக்கிட்டே இருக்கா? அப்போ இப்படி பண்ணிப் பாருங்க!

Author: Hemalatha Ramkumar
8 March 2023, 10:02 am

ஆண்கள் பெண்கள் என இருவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் தலைமுடி கொட்டுவது. சிலருக்கு லேசாக முடி கொட்டும். அது இயல்பானது தான். ஆனால், ஒரு சிலருக்கு கொத்து கொத்தாக மிக அதிகமாகவே முடி கொட்டும். கடைசியில் தலைமுடி கொட்டுவது நமக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடும்.

இத்தகைய நிலைக்கு தள்ளப்பபடாமல் இருக்க நாம் இதனை முளையிலேயே கிள்ளி எரிந்து விட வேண்டும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த இப்பொழுது சந்தையில் பல விதமான பொருட்கள் கிடைக்கின்றன. இதற்கென்றே ஷேம்பூக்கள் இருக்கின்றன. முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக் கூடிய ஹேர் ஆயில்கள் உள்ளன. என்ன தான் இப்படி சந்தையில் பல பொருட்கள் இருந்தாலும், இயற்கையாகவே நம்மால் இதனை சரி செய்ய முடியும். முடி உதிர்வு பொதுவாக ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாகவே ஏற்படுகிறது. இதற்கு இயற்கை தந்த ஒரு வரப்பிராசதம் தான் கறிவேப்பிலை. இதில் இரும்புச் சத்து உட்பட நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

ஆனால், நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், கறிவேப்பிலையில் இன்சுலின் உள்ளது. அதனால் தினசரி எழுந்த உடன் ஒரு கறிவேப்பிலை கொத்தை எடுத்து தண்ணீர் கொண்டு நன்றாக சுத்தம் செய்து 10 இலைகளை வெறுமனே சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் அந்த 10 இலைகளைக் கொண்டு ஜுஸ் போட்டு சாப்பிடலாம். இது தவிர்த்து இரும்புச் சத்தை அதிகரிக்க முருங்கைக் கீரை, பேரிட்சை பழம், சிறுதானியங்கள், உலர்ந்த திராட்சை, மாதுளம் பழம் போன்றவற்றை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவு பிடிக்கும் என்றால் நீங்கள் முட்டை, மீன் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு உங்கள் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனையை இயற்கை உணவுகள் மூலம் சரி செய்து உங்கள் முடி கொட்டும் பிரச்சனையை எளிதில் சமாளித்து விடலாம். உணவே மருந்து என்பதை நினைவில் கொண்டு ஆரோக்கியமாக இருங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!