உலகளவில் பிரபலமான ‘சரசுஸ் சமையல் YOUTUBER’… 58 வயதில் சமையல் கலைஞர் மட்டுமல்ல டிசைனராகவும் அவதாரம்.. மகளிர் தின ஸ்பெஷல்..!!

Author: Babu Lakshmanan
8 March 2023, 7:32 pm

50 வயதில் சமையலுக்காக youtube channel ஆரம்பித்து 4 லட்சம் சந்தாதாரர்களையும் 6 கோடியே 73 லட்சம் பார்வையாளர்களையும் பெற்ற சரசுஸ் சமையல் youtuber பற்றிய உலக மகளிர் தினத்தினையொட்டி ஸ்பெஷல் ரிப்போர்ட்

கரூர் மாநகரில் வசிப்பவர் அசோகன் (64), இவரது மனைவி சரஸ்வதி அசோகன் (58), இவர் கரூர் மாநகரம் மட்டுமில்லாது, தமிழக அளவில் மட்டுமல்ல, உலகளவில் இவரது பெயர் தெரியாத பெண்மணிகளே இருக்க மாட்டார்கள். அப்படி பட்ட, சரசுஸ் சமையல் என்கின்ற பெயரில் youtube ஒன்றினை இவரே நடத்தி வருகின்றார். கேமரா மேன், எடிட்டிங் ஒர்க், தம்ப்நெயில் மேக்கிங் ஆகியவனை மட்டுமல்ல, youtube work அனைத்தினையும் இவர் ஒருவரே செய்து வருவது தான் இதில் விஷேசம்.

ஏதேனும் ஒரு நிகழ்ச்சி எடுக்க வேண்டுமென்றால் ஒரு கேமிரா மேன், விஸ்வல் எடிட்டிங், போட்டோ சூட் மற்றும் டிஜிட்டல் போட்டோ மேக்கிங் ஆகியவனை என்று அனைத்தினையும் 58 வயது பெண்மணி ஒருவரே இன்றும் செய்து வருவது, உலக பெண்கள் தினத்தினை முன்னிட்டு அவரது செயல் வியப்பின் குறியீடாக கொண்டுள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் பிறந்தவர் சரஸ்வதி, தனக்கென்று ஒரு சமையல் அடையாளம் பிடிக்க திட்டமிட்டு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு, சமையம் சைவம் மற்றும் அசைவம் ஆகிய உணவுகள் தயாரிக்கும் விதம் குறித்தும் வீடியோ எடுத்து அதனை youtubeல் பதிவிட்டு வந்த அவர், தற்போது சுமார் 4 லட்சம் சந்தாதாரர்களை பெற்றுள்ளார். 4 வருடங்களுக்கு முன்பு சில்வர் பிளே பட்டன் பெற்றுள்ளார்.

திருமணமான பெண்கள் இல்லற வாழ்வில் குடியேறும் போது அவர்களுக்கு சமையற்கலைக்கு மிகுந்த ஊக்கப்பூர்வமான சமையற்கலைகளையும், அதனை குறித்த சந்தேகங்களையும் எடுத்துரைக்கும் இந்த சரஸ்வதி அசோகன் செயல் உலக பெண்கள் தினத்தில் மற்ற பெண்களும் அவரது கணவரும் வாழ்த்தும் செயல் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

  • famous Actress Kept her Husband in his Control ஒரு மாதமாகியும் ஓயாத ஹினிமூன்… கணவரை கட்டுப்பாட்டில் வைத்த பிரபல நடிகை!
  • Views: - 531

    0

    0