ரசிகர்கள் தான் முக்கியமாப்போச்சா…? வாரிசு விழாவில் விஜய் நடத்தை குறித்து ஷோபா வருத்தம்!

Author: Shree
9 March 2023, 9:33 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மிகப்பெரும் நட்சத்திர பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் கடைசியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் வரும் கதை போலவே அவரது சொந்த வாழ்க்கையும் தாய், தந்தையுடன் பேசாமல் இருக்கிறார்.

குடும்ப சண்டையெல்லாம் படமெடுத்து எங்க உசுர ஏன் வாங்குறீங்க என என நெட்டிசன்ஸ் பலர் விமர்சித்தனர். முதலில் உங்க அப்பா, அம்மாவை மதியுங்கள் அப்புறம் அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம் என சிலர் கூறினார்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களோடு ரசிகராக விஜயின் அப்பா மற்றும் அம்மா அவரை கைகுலுக்கி நலன் விசாரித்தது பேசுபொருளானது. இதனால் விஜய்யின் நடத்தை சரியில்லை என எல்லோரும் அவரை விமர்சித்தனர்.

இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஷோபனா சந்திரசேகர், வாரிசு விழா விஜய்யின் ரசிகர்களுக்காக நடத்தப்பட்டது. அங்கு வந்து எங்களோடு கொஞ்சி அரவணைக்க அவசியம் இல்லை. நாங்களே ரசிகர்கள் விஜய்யின் மீது வைத்துள்ள அன்பை பார்த்து ஆச்சர்யப்பட்டோம்.

ஒரு குடும்ப விழா என்றால் குடும்பத்தை சார்ந்தவர்களை கவனிக்காமல், விழாவிற்கு வந்தவர்களை தான் கவனிப்போம். அதே போல தான் விஜய் காண வந்த ரசிகர்களை திருப்திப்படுத்துவதே எங்களின் நோக்கமே தவிர விஜய் எங்களை கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணமே எங்களுக்கு சுத்தமாக இல்லை என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…