தப்பித்தவறி கூட விவேகம் படத்தை காட்டிடாதீங்க – Blue சட்டை மாறனை பொளந்துகட்டும் தல Fans!

Author: Shree
9 March 2023, 10:06 am

மும்பையில் பிறந்து வளர்ந்து தென்னிந்திய சினிமாவில் சுத்தி சுத்தி 10 ரவுண்ட் அடித்து முன்னணி நடிகையாக இங்கு மார்க்கெட் பிடித்து பலகோடி சம்பாதித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004ம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பின்னர் தெலுங்கு பக்கம் சென்று அங்கு நல்ல இடத்தை தக்கவைத்தார்.

அதன் பின்னர் கோலிவுட் சினிமா அவரை இறக்குமதி செய்ய 2008ஆம் ஆண்டு பழனி படத்தின் மூலம் அறிமுகமானார். நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, மாரி, விவேகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் மும்பையை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்வரை திருமணம் செய்துக்கொண்டு நீல் கிச்சுலு என்ற மகனை பெற்றெடுத்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில்,

நான் என் மகனுக்கு 8 வயது வரை எந்த படமும் காட்டப்போவதில்லை என தெரிவித்தார். மேலும் நான் காட்டவுள்ள முதல் படம் நான் நடித்த துப்பாக்கி தான் என கூறினார். இது சமூகவலைத்தளத்தில் வைரலாக விஜய் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், தப்பித்தவறி கூட விவேகம் படத்தை காட்டிடாதீங்க மேடம் என விஜய் பேன்ஸ் ட்ரோல் செய்தனர். இதனை Blue சட்டை மாறன் ட்விட்டரில் ஷேர் செய்து நக்கலடித்து சிரித்துள்ளார். இது அஜித் ரசிகர்களை செம கடுப்பாக்கியுள்ளது.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?