சாகுறதுக்கே முன்னாடியே சமாதி… தனக்கு தானே கல்லறை கட்டி அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை!

Author: Shree
9 March 2023, 10:45 am

தமிழ் சினிமாவில் 80ஸ் காலத்தில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை ரேகா. கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள், குணா உள்ளிட்ட தமிழ் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.அதுமட்டும் அல்லாமல் தமிழில் உத்தம புத்திரன், வில்லன், தசாவதாரம், தலைவா உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தனத்தை மீது அலாதி பிரியம் கொண்ட ரேகா அவர் இறந்த பின்னர் அவர் கூடவே இருக்கவேண்டும் என்பதற்காக தந்தை சமாதிக்கு அருகிலேயே அவருக்கும் சமாதி கட்டி பராமரித்து வருகிறாராம்.

தான் இறந்த பிறகு அந்த கல்லறையில் தான் தனது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வைத்திருக்கிறாராம். இந்த செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தாலும் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. பிரபல நடிகை உயிரோடு இருக்கும்போதே தனக்கு தானே சமாதி கட்டியிருப்பது பலர் விசித்திரமாக பேசி வருகிறார்கள்.

  • Ethirneechal Serial Fans are shocked and stop to watch என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!