விழுந்து விழுந்து காதலித்த இளைஞர்… இறுதியில் NO சொன்ன பெண் ; நள்ளிரவில் அரங்கேறிய சோகம்..!!

Author: Babu Lakshmanan
9 March 2023, 11:51 am

நெல்லை : நெல்லையில் ஒரு தலை காதல் விவகாரத்தில் இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மாரி ராஜ் (32) இவர் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு மாரிராஜ் திடீரென வீட்டில் வைத்து விஷமருந்தி மயங்கி கிடந்துள்ளார்.

இதை கவனித்த அவரது குடும்பத்தினர் மாரி ராஜை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே மாரி ராஜ் உயிரிழந்தார். தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாரிராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில், மாரிராஜ் ஒரு தலை காதலால் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மாரி ராஜ் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அந்த பெண் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அதனால் ஏற்பட்ட மன வேதனையில் மாரிராஜ் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!