9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 48 வயது நபர் : நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்புக்கு குவியும் வவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2023, 9:15 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி காமராசர் நகரை சேர்ந்தவர் அய்யர் (48). தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஓராண்டுக்கு முன்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அய்யர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பான சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பழனி மகளீர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா குற்றத்தை நிருபித்தனர்.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள், குற்றம்சாட்டப்பட்ட அய்யருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

போக்சோ வழக்கில் கைதான நபருக்கு ஓராண்டுக்குள் சிறை தண்டனை கிடைத்து தீர்ப்பு வழங்கங்கப்பட்டது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!