காட்டுப் பசியில் இருக்கும் சிம்புவுக்கு கம்மி சம்பளம் கொடுத்த கமல்!

Author: Shree
10 March 2023, 10:04 am

காட்டுப் பசியில் இருக்கும் சிம்புவுக்கு கம்மி சம்பளம் கொடுத்த கமல்!

கடந்த சில வருடங்களாக படவாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் பாக்கெட் மணிக்கே படாத பாடுபட்டதாக சிம்பு பேட்டிகளில் கூறி கவலைப்பட்டார். அதன் பிறகு மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார்.

அதனை தொடர்ந்து தற்போது பத்து தல என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் தனது 48வது படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதன் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இது ரஜினிக்காக தயார் செய்த கதை எனவும், இதில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை ரூ.40 கோடியாக உயர்த்தியதாக தகவல் வெளியானது.

ஆனால், தற்போது இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட் அடிக்கும் அதனால் நிறைய லாபம் கிடைக்கும் என எண்ணிய சிம்பு தனது சம்பளத்தை குறைத்தே கொடுங்கள் என கமலிடம் கூறினாராம்.

ஆனால், இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தப்போகிறாராம். அட, நல்லா யோசனை பண்ணி கேம் விளையாடுறாருப்பா நம்ம சிம்பு. இதனால் கமலுக்கு தான் லாபம். ஆண்டவர் செம ஹேப்பியில் இருக்கிறாராம்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?