காலை எழுந்தவுடன் டீ, காபி குடிப்பது பலரது பழக்கமாக உள்ளது. அவ்வாறு டீ, காபி குடிக்காவிட்டால் ஒரு சிலருக்கு அன்றைய நாளே ஓடாது. இன்னும் சிலர் டீ, காபி குடிக்கும் போது பிஸ்கட் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் காலை முதல் வேலையாக பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
இரவு முழுவதும் வெறுமனாக இருக்கும் வயிற்றில் நீங்கள் பிஸ்கட்டை சேர்க்கும் போது, அது ஏராளமான செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். பிஸ்கட்டானது சுத்திகரிக்கப்பட்ட மாவினால் செய்யப்படுகிறது. இது அதிக கிளைசீமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
இதனால் உடலில் உள்ள இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அதே போல், உப்பு தூவப்பட்ட பிஸ்கட்டுகள் இரத்த அழுத்த அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டது. வெண்ணெய் கலந்து தயாரிக்கப்பட்ட பிஸ்கட்டுகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம்.
செயற்கை சுவையூட்டிகள் கலந்து செய்யப்படும் பிஸ்கட்டுகளை நாம் சாப்பிடும் போது, அது உடலின் கலோரி அளவுகளை அதிகரிக்கும். இதனால் உடல் எடை மிக விரைவாக அதிகரிக்கலாம். ஆகையால், காலை எழுந்தவுடன் முதல் வேலையாக ஒரு சொம்பு தண்ணீர் குடித்து விட்டு, அரை மணி நேரம் கழித்து எதையும் சாப்பிடுவது நல்லது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.