அட அவரு மகனா இது..? பிரபல நடிகரின் வாரிசை சும்மா கூப்பிட்டு வைத்து அதிர்ச்சி கொடுத்த பாலா!!
Author: Vignesh10 March 2023, 1:30 pm
பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால், இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும்.
அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.
சேது படத்தின் மூலம் அறிமுகமானவர், பின்னர் பல படங்களை இயக்கினார், பாலா ஒரு வித்தியாசமான இயக்குநர். அதிலும் நடிப்பு வரவில்லை என்றால் கெட்ட வார்த்தையில் திட்டுவது, கடும் சொற்களால் பேசுவது என ஒரு டெரரான ஆள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில், இயக்குனர் பாலா எரியும் பனிக்காடு என்கிற நாவலை தழுவி பரதேசி திரைப்படத்தை எடுத்தார். இந்த படத்திற்காக அவர் நடிகர்களை தேடி வந்தபோது, நடிகர் அதர்வா பானா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய இரு படங்களில் நடித்திருந்த நிலையில், பாலாவின் படத்தில் நடித்தால், தனக்கு ஒரு நல்ல முன்னேற்றமாக இருக்கும் என அதர்வா சென்று படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டார்.
அவரை அழைத்த இயக்குனர் பாலா முதலில் இவரை வைத்து லுக் டெஸ்ட் எடுத்து பார்க்கலாம் என முடிவு செய்து, அடுத்த நாள் அதர்வாவை அழைத்த பாலா, அவருக்கு முடியை வித்தியாசமாக வெட்டிவிட்டு, ஒரு கோணிப்பையில் செய்த உடையை உடுத்த கூறியுள்ளார்.
பிறகு சிறிது சேறை எடுத்து அதர்வாவின் முகம் கைகளில் எல்லாம் தடவி, எல்லாம் முடித்து ஃபோட்டோ எடுத்து பார்த்துவிட்டு சரி அதர்வா இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என இயக்குனர் பாலா முடிவு செய்ததாக அதர்வா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகுதான் தனது கெட்டப் எப்படி இருக்கிறது என்பதை கண்ணாடியில் பார்த்த அதர்வாவிற்கே இது நாம்தானா? என அதிர்ச்சியாக இருந்ததாகவும், அங்கு வந்த ஒருவர் முரளி மகனா இது என கேட்டதாக இதை ஒரு பேட்டியில் அதர்வா கூறியுள்ளார்.
.