ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : திருவண்ணாமலையை போல காஞ்சியிலும் கைவரிசை காட்ட முயற்சி..!!

Author: Babu Lakshmanan
10 March 2023, 1:20 pm

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே திம்மராஜம் பேட்டை பகுதியில் செயல்படும் தனியார் ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நெடுஞ்சாலையில் உள்ள திம்மராஜம் பேட்டையில் ஹிட்டாச்சி நிறுவனத்தின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. தனியார் ஏடிஎம் மையத்தில் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.

அப்பொழுது, இரவு கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் வழக்கம் போல சைய்ரன் ஒலி எழுப்பிக்கொண்டு வந்து உள்ளனர். இதனைக் கண்ட கொள்ளையர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஏடிஎம் இயந்திரத்தை கண்காணிக்க வந்த போலீசார் சென்று பார்த்த பொழுது, ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் உடனடியாக உயர்அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் எஸ் பி சுதாகர், டிஎஸ்பி ஜூலியட் சீசர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கொள்ளையடிக்க முயற்சித்த ஏடிஎம் இயந்திரத்தில் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை செய்தது போக 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் ஏதும் கொள்ளை போகவில்லை. வாலாஜாபாத் காவல்துறையினர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

வாலாஜாபாத் பகுதியில் உள்ள காவல்துறையினர் ஆய்வாளர் ஜெயவேல் உட்பட யாரும் ஈடுபாட்டுடன் வேலை செய்யாததால் ஏராளமான திருட்டு சம்பவங்கள், கஞ்சா விற்பனை, அடிதடி, மணல் திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இதுவரையில் எந்த குற்ற சம்பவத்திலும் குற்றவாளிகளை கைது செய்ததில்லை என பரவலான குற்றச்சாட்டும் நிலை வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், வாலாஜாபாத் அருகே நடைபெற்றுள்ள ஏடிஎம் கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?