அடிவயிற்றில் தொங்கும் கொழுப்பை குறைக்க அருமையான ஐடியா!!!

Author: Hemalatha Ramkumar
10 March 2023, 2:36 pm

உடல் எடையைக் குறைக்க பல விதமான முயற்சிகளை செய்தும், எதுவும் பலன் அளிக்கவில்லையா…??? கவலைப்பட வேண்டாம். இந்த பதிவு உங்களுக்காக தான். ஓமம், சீரகம் கொண்டு செய்யப்படும் தண்ணீரின் நன்மைகள் மற்றும் அது உடல் எடையை குறைக்க எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து இந்த இப்போது பார்க்கலாம்.

உணவுகளில் ஒரு சில மாற்றங்களைச் செய்வதன் மூலமாக உடல் எடையை எளிதாக குறைத்து விடலாம். அந்த வகையில் ஓமம் மற்றும் சீரகம் தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால், நான்கு முதல் ஐந்து கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்.

ஓம விதைகளில் வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்சிஜனேற்றிகள் காணப்படுகின்றன. இவை டிரைகிளிசரைடு மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டவை. கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு அளவுகள் அதிகமாக இருந்தால், அது இதய நோய்களை ஏற்படுத்தும்.

செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் ஊட்டச்சத்துக்களை சிறந்த முறையில் உறிஞ்சுவது போன்றவற்றிற்கு ஓமம் உதவுகிறது. இது எடை இழப்பில் பெரும் பங்கு வகிக்கிறது. ஏனெனில், ஓம விதைகள் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. அதோடு உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

அடுத்தபடியாக, சீரகம் ஏராளமான ஆன்டிஆக்சிடன்டுகளை கொண்டிருப்பதால் இது நம் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. அதோடு உடலில் கொழுப்பு சேராமல் பார்த்து கொள்கிறது. ஆகையால் ஓமம் மற்றும் சீரகம் ஆகிய இரண்டுமே உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

இதற்கு முந்தைய நாள் இரவே ஓமம் மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் தனித்தனி கிண்ணத்தில் போட்டு ஊற வைக்கவும். மறுநாள் காலை, நீரை மட்டும் வடிகட்டி எடுத்து அதனை பதினைந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் தண்ணீர் வெதுவெதுப்பானதும் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • sr prabhu reply for comments on actor shri health issues விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!
  • Close menu