ரவுடி கும்பலுக்கு ஆதரவாக அரிவாளுடன் சேட்டை.. வைரலான ரீல்ஸால் வந்த வினை ; கோவை தமன்னாவுக்கு செக் வைத்த போலீசார்..!!

Author: Babu Lakshmanan
10 March 2023, 3:30 pm

கோவையில் இன்ஸ்டா-வில் ரவுடி கும்பலுக்கு ஆதரவாக ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் மீது போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை கோர்ட் அருகே கடந்த மாதம் 13ம் தேதி கோகுல் (25) என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதில், தொடர்புடைவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகின்றனர். விசாரணையில், கடந்த 2021ம் ஆண்டு குரங்கு ஸ்ரீராம் (22) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கோகுல் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இதற்கு, பழிக்கு பழியாக ஸ்ரீராமின் கூட்டாளிகள் கோகுலை கொலை செய்தது தெரியவந்தது.

இன்ஸ்டா-வில் யார் பெரிய ரவுடி என்ற மோதலில் இக்கொலை சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது. எனவே, போலீசார் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர். இதில், பிரகான் பிரதர்ஸ், தெள்ளவாரி போன்ற இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருவது தெரிந்தது. இதற்கிடையே விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வினோதினி (எ) தமன்னா (23) என்ற இளம்பெண் பட்டாகத்தியால் போஸ் கொடுப்பது போன்றும், புகைபிடிப்பது போன்றும் பதிவிட்டுள்ளார்.

இவர் மீது கடந்த 2021ம் ஆண்டு பீளமேடு காவல் நிலையத்தில் கஞ்சா விற்ற வழக்கு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் விக்கு-நா-பேன்ஸ் போத்தனூர் என்ற இன்ஸ்டா பக்கத்திலும் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். விக்கு சண்முகம் என்பவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. அவருக்கு ஆதரவாக தமன்னா வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆயுத தடை சட்டம் பிரிவுகளின் கீழ் விக்கு சண்முகம், தமன்னா ஆகிய இருவர் மீதும் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!