“ஜிலேபி மாதிரி”.. அனுஷ்காவின் அந்த இடம் எனக்கு பிடிக்கும்.. காமெடி நடிகரின் பேச்சால் எழுந்த சர்ச்சை..!
Author: Vignesh10 March 2023, 8:30 pm
நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். அவர் நடிப்பில் படம் வெளியாகி சுமார் ஒன்றரை வருடங்கள் ஆவதால், அவரது வரவிருக்கும் படத்தின் மீது பார்வை அனைவரிடம் உள்ளது.
ஆரம்பத்தில் நிறைய காதல் படங்கள் நடித்த அனுஷ்கா இடையில் தனது ரூட்டை மாற்றி பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளில் அதிகம் நடிக்க தொடங்கினார். தற்போது 35 வயதாகும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்காவால் எடையை குறைக்கவே முடியவில்லையாம்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல தெலுங்கு காமெடி நடிகர் அலி, அனுஷ்காவை குறித்து மோசமாக வர்ணித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர், ” அனுஷ்கா ஜிலேபி போன்றவர் எல்லாரும் அவரை விரும்புவார்கள் என்றும், அவருக்கு அழகான தொடை இருக்கிறது என்றும், இவர் நடித்த பில்லா படத்தை பார்த்த பிறகு நானும் அனுஷ்கா ரசிகராக மாறிவிட்டேன்” என்று ஆபாச வார்த்தையில் பேசி இருந்தது பெரும் சர்ச்சை ஆன நிலையில், நடிகர் அலி அனுஷ்காவிடம் மன்னிப்பு கேட்டார். இதனிடையே, தற்போது இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.