கள்ளக்காதலிக்காக குடும்பத்தையே விரட்டியடித்த கணவன்… மாற்றுத்திறனாளி மகனுடன் வீதியில் தவித்த தாய்.. இறுதியில் நிகழ்ந்த கத்திகுத்து..!!

Author: Babu Lakshmanan
10 March 2023, 8:12 pm

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே கள்ளக்காதலிக்காக மாற்றுத்திறனாளி மகன் உள்பட குடும்பத்தையே வீதியில் தவிக்க விட்ட நபர் மீது அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட பெண் கண்ணீட் விட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். கூலி வேலை செய்து வரும் இவருக்கு, மாரியம்மாள் என்ற மனைவியும், மூன்று மகள்களும், ஒரு மாற்றுத்திறனாளி மகனும் உள்ளனர்.
இந்நிலையில், சேகர் வசித்து வரும் வீட்டிற்கு அருகாமையில் உள்ள தமிழ்ச்செல்வி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

இதனையடுத்து, சேகர் தனது கள்ளகாதலி தமிழ்ச்செல்வியை தனது வீட்டிற்கே கூட்டிக்கொண்டு வந்து குடும்பம் நடத்தியுள்ளார். இதை தட்டுக்கேட்ட மனைவியையும், மாற்றுத்திறனாளியான மகன் மற்றும் இரண்டு மகள்களையும் வீட்டை விட்டு வெளியே துரத்தியதால், மாரியம்மாள் இருக்க இடமின்றி வீட்டிற்கு அருகே உள்ள வாரச்சந்தையில் மாற்றுத்திறனாளி மகன் மற்றும் மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.

வாரச்சந்தையில் பலரும் குடும்பத்தோடு தங்கியிருப்பதால் இடபற்றாக்குறை ஏற்படுவதாகவும், அவர்களை அப்புறப்படுத்த வேண்டுமெனவும், அங்குள்ள வியாபாரிகள் அளித்த புகாரினையடுத்து, அங்கு தங்கியிருந்த மாரியம்மாள் உள்ளிட்ட சிலரை காலி செய்யுமாறு நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, மாரியம்மாள் மாற்றுத் திறனாளியான மகனை அழைத்துக்கொண்டு, கணவர் குடியிருக்கும் வீட்டிற்கு சென்று தன்னையும் மகன் மகளையும் வீட்டில் இருக்க அனுமதிக்குமாறு வேண்டியுள்ளார். ஆனால், கள்ளக்காதலி தமிழ்செல்வியுடன் வீட்டில் இருந்த சேகர் தனது மனைவி மாரியம்மாளை வீட்டிற்குள் விட மறுத்து வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த மாரியம்மாளின் இளைய மகள் பிரியதர்ஷினி சேகரிடம் நியாயம் கேட்ட போது, அங்கிருந்த சேகரின் கள்ளக்காதலி தமிழ்ச்செல்வி பிரியதர்ஷினையை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, காயமடைந்த ப்ரியதர்ஷினிக்கு கோபி அரசு மருத்துமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரிடம் கோபி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மாற்றுத்திறனாளியான மகனுடன் இருக்க இடமின்றி தவித்து வரும் மாரியம்மாளை தனது கணவர் வீட்டிற்குள் விடாமல் கொடுமை படுத்துவதாக, கோபி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சேகர் மீது புகார் அளித்தும், அந்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கணவர் சேகருக்கு ஆதரவாகவே அனைவரும் செயல்படுவதாக மாரியம்மாள் தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 438

    0

    0