போக்குவரத்து ஊழியரின் பைக் திருட்டு… அசால்ட்டாக திருடிச் செல்லும் நபர்… வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
11 March 2023, 9:47 am

மதுரை போக்குவரத்து ஊழியரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்ட போக்குவரத்து ஊழியரான மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது இருசக்கர வாகனம் காணாமல் போனது.

இதையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை எவ்வித அச்சமும் இன்றி திருடிச் செல்லும் மர்ம நபரை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?