மீனா ‘நான் ஈ’ பட நடிகருடன் ரகசிய திருமணம்?.. அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

Author: Vignesh
11 March 2023, 3:45 pm

90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா. தமிழ் படங்களைத் தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், தமிழில் அத்தனை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக வலம் வந்தார்.

meena_updatenews360

இதனிடையே, கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நடிகை மீனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது, மீனா போல சாயல் கொண்ட குழந்தை நைனிகா, தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களல் குழந்தை நட்சத்திரமா நடித்தார்.

Meena - Updatenews360

இந்த நிலையில் கடந்த வருடம் மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து தனிமையில் மீனா தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க, 15 ஆண்டுகளுக்கு முன்பு மீனாவும், கன்னட நடிகர் சுதீப்பும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

அப்போது அவர்கள் இருவரும் இணைந்து 2 படங்களில் நடித்திருந்த நிலையில், இந்த வதந்தியை அறிந்த மீனா, “தன்னை திருமணம் செய்ய வைக்க ஊடகவியலாளர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகின்றனர் எனவும், தனது திருமணம் குறித்து ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் வருவது இது மூன்றாவது முறை என்றும், ஆனால் இந்த கிசுகிசுவில் உண்மையில்லை என்றும், சுதீப் தனது நல்ல நண்பர்களில் ஒருவர் என்றும் நாங்கள் இரண்டு படங்களில் மட்டுமே இணைந்து நடித்துள்ளோம் எனவும், தன் திருமணத்தை பத்திரிகையாளர்களிடமோ அல்லது யாரிடமோ தான் மறைக்க மாட்டேன் என்றும், தன் திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பேன்” என அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வதந்திக்கு சுதீப்பும் பதிலடி கொடுத்திருந்தார்.

Meena - Updatenews360
  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 2625

    68

    42