சாதிப் பெயரை சொல்லி வன்முறையை தூண்டலாமா? அரசியல் விமர்சகருக்கு எதிராக அதிமுக பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2023, 7:24 pm

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மீது திண்டிவனம் அடுத்த ரோசனை காவல் நிலையத்தில் அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம் புகாரளித்துள்ளார்.

அதில் நேர்காணல்களில் அரசியல் கட்சியினரின் சாதியை குறிப்பிட்டு பேசும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

சாதியை குறிப்பிட்டு பேசி, இரு பிரிவினரிடையே வன்முறையை ரவீந்திரன் துரைசாமி தூண்டுவதாகவும், நான் சொல்லாத விஷயத்தை சொன்னதாக கூறி அவதூறு பரப்பி வருகிறார் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், நேர்காணலில் அவருடை பேச்சு வன்முறை மற்றும் மோதலை தூண்டும் வகையில் பேசி வருவட்டதாகவும், குறிப்பாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னணி தலைவர்களை ஒவ்வொரு முறையும் பெயரை சொல்லி, சாதியை குறிப்பிட்டு கீழ்த்தரமாக பேட்டியளித்து வருவதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிவி சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!
  • Close menu