விஜய்க்கு என்ன ஆச்சு…? உடல் மெலிந்து நோயாளி போல் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!
Author: Shree11 March 2023, 8:19 pm
விஜய்க்கு என்ன ஆச்சு…? உடல் மெலிந்து நோயாளி போல் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்நிலையில் விஜய்யின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் விஜய் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் இருப்பதை பார்த்து அஜித் ரசிகர்கள் இது உங்களுக்கு செட் ஆகல என விமர்சித்து வழக்கம் போல் ட்ரோல் செய்துள்ளனர்.
அதுமட்டும் அல்லாமல், இதில் விஜய் உடல் மெலிந்து சோர்வாக காணப்படுகிறார். படத்திற்காக உடல் எடை குறைத்தாரா? அல்லது காஷ்மீரின் கடுங்குளிரில் இப்படி ஆகிவிட்டாரா என்பது தெரிவியவில்லை.