விக்கியிடம் கைவரிசையை காட்டிய நபர்.. – யாருடா நீங்கலாம் ? கடும் கோபத்தில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு..!

Author: Vignesh
13 March 2023, 11:45 am

நயன்தாராவை காதலித்து ஒட்டுமொத்த சினிமா பிரபலத்தையே யார் அந்த ஆளு என திரும்பி பார்க்க செய்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் மிகப்பெரும் அளவில் கவனத்தை ஈர்த்தார்.

Nayanthara__Vignesh_Shivan_updatenews360

அதன் பிறகு நயன்தாராவை காதலித்து வந்தார். சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே வாழ்க்கையில் இருவரும் நிறைய சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து அவரது 62வது படத்தை இயக்குவதாக இருந்தார், ஆனால், இவர் எழுதிய கதையில் அஜித்துக்கு திருப்தி இல்லாததால் அவரை தூக்கிவிட்டு வேறு இயக்குனரை வைத்து கதை தயார் செய்துவிட்டார்.

“அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது” என விக்னேஷ் சிவன் இது பற்றி உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

nayanthara - updatenews360.jpg 2

இதனிடையே, தற்போது விக்னேஷ் சிவனின் ட்விட்டர் கணக்கு சில மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு இருப்பது குறித்து, கோபமாக இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் தற்போது பதிவிட்டு இருக்கிறார்.

nayanthara - updatenews360.jpg 2
  • members in tn assembly discussed about kadhalikka neramillai movie இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?