அதுக்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல…. திமுக ஆட்சிக்கு வந்தாலே மக்களுக்கு வேதனை : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு..!!
Author: Babu Lakshmanan13 March 2023, 12:41 pm
திமுக ஆட்சி வந்தால் பொது மக்களுக்கு வேதனை என்றும், அதிமுக ஆட்சி வந்தால் பொதுமக்களுக்கு சாதனை என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்து ஆயிரம் பேர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பொதுக் கூட்டத்தில் பேசியதாவது விஜயபாஸ்கர் :- திமுக ஆட்சி வந்தால் பொது மக்களுக்கு வேதனை. அதிமுக ஆட்சி வந்தால் பொதுமக்களுக்கு சாதனை. தமிழகத்தில் இரண்டு வருடத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் வரும். அப்போது, தாலிக்கு பணம் திட்டம் மாணவர்களுக்கு லேப்டாப் அம்மா மினி கிளினிக் ஆகிய திட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்படும். எனக்கு எவ்வளவு சோதனைகள் கொடுத்தாலும் அதைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன். நான் மக்கள் பணி ஆற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உன்னத திட்டமான தாலிக்கு தங்கம் திட்டம் மாணவர்களுக்கு லேப்டாப், அம்மா மினி கிளினிக் ஆகியவை இந்த அரசால் முடக்கப்பட்டுள்ளது. தாய்மார்களுக்கு உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக தேர்தல் நேரத்தில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 22 மாதங்களாக நபிரகம் இதுவரை அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இனி திட்டம் நிறைவேற்றப்படுமானால், பதவி ஏற்ற காலத்தில் இருந்து இன்று வரை 22,000 சேர்த்து வழங்க வேண்டும்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் மருத்துவமனைகளில் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டதோடு, பல உபகரணங்கள் உடல் பரிசோதனை செய்வதற்கும், அறுவை சிகிச்சை செய்வதற்கும் அமைத்து தரப்பட்டிருந்தது. ஆனால், தற்போதுள்ள திமுக ஆட்சியில் மருத்துவர்கள் பற்றாக்குறை மருத்துவ உபகரணங்கள் செயல்படுத்த முடியாத நிலைமையில் உள்ளதால், நோயாளிகள் கடுமையான அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இரண்டு வருட காலத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக அமர்வது உறுதி. அப்போது, தாலிக்கு தங்கம் திட்டம் அம்மா இன்னிக்கி லீக் மாணவர்களுக்கு லேப்டாப் ஆகிய திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு வேதனை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு சாதனை. எனக்கு எவ்வளவோ சோதனைகள் கொடுத்தாலும், அதைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன். நான் மக்கள் பணியாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழர்களின் வீர விளையாட்டு என ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு ஆன்லைன் மூலமாக டோக்கன் கொடுக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பாரம்பரியம் இதனால் பறிபோகிறது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு தேர்தல் நேரத்தில் நீங்கள் முறையான முடிவை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.