வெங்கட் பிரபுவின் கஸ்டடியில் சமந்தாவின் மாஜி கணவர் – வைரலாகும் வீடியோ!

Author: Shree
13 March 2023, 8:25 pm

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட சில வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இவர், தற்போது கஸ்டடி என்ற தெலுங்கு படத்தை இயக்குகிறார். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க, பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் அரவிந்த் சுவாமி, பிரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாகசைத்தன்யா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. நாக சைதன்யா நீருக்கடியில் இருப்பது போன்ற இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதோ அந்த வீடியோ:

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 522

    0

    1