OLX வாடிக்கையாளர்களே உஷார்… ஒரே வீட்டை 6 பேருக்கு ஒத்திக்கு விட்டு ரூ.50 லட்சம் மோசடி ; ஒருவர் கைது… போலீசார் விசாரணை
Author: Babu Lakshmanan14 March 2023, 11:25 am
மதுரை : மதுரை கூடல்நகர் பகுதியில் ஒரே வீட்டை OLX மூலம் 6 பேருக்கு 50 லட்சத்திற்கு ஒத்திக்கு விட்ட மோசடி நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர், ஆனையூர் அருகே மலர்நகர் பகுதியில் ரோஜாமலர் தெருவில் புகழ் இந்திரா என்ற நபர் தன்னுடைய இரண்டு வீட்டினை OLX மூலமாகவும், புரோக்கர்கள் மூலமாகவும் 10 பேருக்கு ஒத்திக்கு விட்டு மோசடி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கூடல்புதூர் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
ஒவ்வொரு நபர்களிடமும் தலா 8 லட்சம் ரூபாய் வரை வாங்கிவிட்டு வீடு பராமரிப்பு என கூறி தாமதப்படுத்திவிட்டு மற்றொரு நபர்களுக்கும் ஒத்திக்கிவிட்டு மோசடி செய்துள்ளார்.
முதற்கட்டமாக 6 பேர் புகார் அளித்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து புகார்கள் வருவதால் கூடல்நகர் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.