மறைந்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு கவுரவம் : தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2023, 12:40 pm

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு ‘அனிதா’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து போராடிய அரியலூர் மாணவி அனிதா 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

அவரது தற்கொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு ‘அனிதா’ பெயர் வைக்கப்பட்டுள்ளது.

22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு ‘அனிதா’ பெயர் சூட்டி முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அனிதா நினைவு அரங்கம் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhyankar viral songs ஹாட்ரிக் வெற்றியில் சாய் அபியங்கர்…ரசிகர்களை சுண்டி இழுத்த “சித்திர புத்திரி” பாடல்..!