உச்சி வெயிலில் தண்டனை கொடுத்த ஆசிரியர்.. கண்ணீர் விட்டு கதறி அழுத பள்ளி மாணவன் : ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2023, 5:21 pm

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புவரை சுமார் 1600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு காலை நடந்தது. இதனால் மற்ற வகுப்புகளுக்கு மதியம் பள்ளிக்கு மாணவ மாணவிகள் வருவார்கள்.

அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஆனால் நேற்று செந்துறை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரையும் செந்துறை அரசு தொடக்கப்பள்ளிக்கு சிறப்பு படிப்பு பயிற்சிக்காக ரகுநாத், முனிசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் ஆசிரியர்கள் வரவழைத்தனர்.

ஆனால் 10-ம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் வகுப்புகளுக்கு சரிவர வராமலும்,பள்ளிக்கு நேற்று காலை காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ரகுநாத் என்ற ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து திட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் செந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மதியம் உச்சி வெயிலில் பள்ளி மைதானத்தில் முட்டி போட்டுக் கொண்டே படிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவன் சூடுதாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அலறித் துடித்தான். இதை அங்குள்ள சிலர் ரகசியமாக படம் பிடித்து வாட்ஸ்அப் குரூப்களுக்கு அனுப்ப அது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 645

    0

    0