தள்ளு..தள்ளு : தள்ளுவண்டியை தள்ளிச் சென்ற போக்குவரத்து காவலர்கள்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2023, 5:29 pm

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை ஓரத்தில் ஏராளமான தள்ளுவண்டி உணவங்கள் செயல்பட்டு வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலும் சாலை விபத்துகளும் அதிக அளவில் ஏற்பட்டன.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் தள்ளு வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டன.

தொடர்ந்து சாலை ஓரத்திலேயே தள்ளுவண்டி உணவுகள் செயல்பட்டு வந்ததால் இன்று அதிரடியாக விழுப்புரம் போக்குவரத்து ஆய்வாளர் வசந்த் தலைமையிலான போக்குவரத்து போலீசார் அதிரடியாக தள்ளு வண்டியை அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளு வண்டியை எடுக்க முடியாத அளவு சங்கிலி கொண்டு பூட்டி வைத்திருந்தனர்.

பின்னர் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஒரு சில தள்ளு வண்டிகளை தூக்கியவாரும் ஒரு சில தள்ளு வண்டிகளை தள்ளு தள்ளு என கூறியவாறு தள்ளி சென்று ஓரமாக விட்டனர்.

போக்குவரத்து போலீசார் தள்ளு வண்டியை தள்ளு தள்ளு என கூறி தள்ளு வண்டியை தள்ளி சென்று ஓரமாக விட்ட சம்பவம் சற்று சலசலப்பையும் நகைச்சுவையும் ஏற்படுத்தியது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 461

    0

    0