பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் : இளைஞர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2023, 9:48 pm

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமூக வலைதளம் (WhatsApp) மூலம் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வரப்பெற்றது.

இது சம்பந்தமாக அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொண்டதில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அனுப்பியவர் கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் அருண்குமார் (27) என்ற நபர் என கண்டறியப்பட்டு சைபர் கிரைம் போலிஸார் மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்குஅனுப்பி வைத்தனர்.

மேலும் இது போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!