மகிழ் திருமேனியை டார்ச்சர் பண்ணும் அஜித் – மீண்டும் சிக்கலில் ஏகே 62?
Author: Shree16 March 2023, 11:11 am
அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார்.
ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
தற்போது விஜய்யின் லியோ படத்துடன் போட்டிப்போட்டுக்கொண்டு தன் படத்தை வெளியிடவேண்டும் என்பதற்காக ஒரே நேரத்தில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எடிட்டர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களிடம் கதை கூறி அவர்களுக்கு ஏற்றார் போல் கதைகளில் கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் செய்து தயார் செய்ய சொல்லி இம்சை செய்து வருகிறாராம் அஜித்.
இதனால் ஒவ்வொருவரின் கருத்துக்களையும் கேட்டு கதை எழுதுவதால் இயக்குனர் மகிழ் திருமேனி நிலை தடுமாறி விடுகிறாராம். அதுமட்டும் அல்லாமல் சீக்கிரமாக ஷூட்டிங்கை முடித்துவிட்டு அஜித் பைக்கிலே வேர்ல்டு ரூர் செல்ல திட்டமிருப்பதால் தான் இப்படி தொல்லை செய்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.