பாலிவுட் நடிகையை கேரவனுக்குள் அழைத்த சூர்யா? பிரபலத்தின் பதிவால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

Author: Shree
16 March 2023, 5:04 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய 42-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி அழுத்தமான ரோலில் நடிக்கிறார்.

இதற்காக சூர்யா குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறாராம்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூர்யா திஷா பதானியுடன் என்ஜாய் பண்ணி நடித்து வருவதாகவும், திஷாவின் ஹாட் மற்றும் கவர்ச்சியை ரசித்து அவரை கேரவனுக்குள் அழைத்து, டீ, லன்ச் டைம் ஸ்பென்ட் பண்ணுவதாக பிரபல பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது சூர்யா ரசிகர்களை கடுங்கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…