ரஜினி அந்த விஷயத்தில் கிரேட்.. சூப்பர் ஸ்டாரை பார்த்தாவது சிம்பு கத்துக்கனும்..!

Author: Vignesh
16 March 2023, 6:05 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், தனது வலைப்பேச்சு வீடியோவில் சிம்புவுக்கு ஒரு அறிவுரை தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு சமீப காலமாக எல்லா மேடைகளிலும் கண்ணீர் விடத் தொடங்கியது அனைவரும் அறிந்த ஒன்று என்றும், ரசிகர்கள் எல்லாம் கதறுகிறார்கள் என்றும், பொதுவாக ஹீரோக்கள் அழுவதே ரொம்ப தவறாக இருக்கிறது எனவும், ரஜினி மீது இல்லாத விமர்சனங்களே இல்லை, ஆனால் ரஜினி இதுநாள் வரை ஒரு மேடையில் கூட வெளியே காட்டிக்கொண்டது இல்லை என்றும், அவர் அழுக ஆரம்பித்தால் வருடம் முழுவதும் அழுதுகொண்டே இருக்கலாம் என தெரிவித்தார்.

simbu - updatenews360
Inimey Ippadithaan Audio Launch Photos

மேலும், கஷ்டம் என்பது அனைவருக்கும் வரும் எனவும், திரையுலகம் என்பதே சூனியக்காரர்கள் சூழ்ந்த இடம்தான் எனவும், ஆதலால் மிகவும் கம்பீரமாக இருக்கவேண்டும் என்றும், ஆதலால் தயவு செய்து சிம்பு அழுதுவிடாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Anthanan-updatenews360

டி.ராஜேந்தரின் பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர் அந்தணன், பல ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதால் அவருக்கும் சிம்புக்கும் மிக நெருங்கிய பழக்கம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 597

    0

    0