தனிமையில் இருக்க காதலியை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர்.. நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம் ; தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்!!

Author: Babu Lakshmanan
16 March 2023, 7:21 pm

தென்காசியில் காதலியை நண்பர்களோடு சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசியில் உள்ள தைக்கா தெருவைச் சேர்ந்த சுடலை முத்து என்பவரின் மகன் மாதவன். ஆட்டோ ஓட்டுநராக இவர் பணியாற்றி வரும் இவர், பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் இவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இப்படியிருக்கையில் காதலர்கள் இருவரும் அடிக்கடி வெளியே சந்தித்து பேசுவதும், ஊர் சுற்றுவதுமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், வழக்கம் போல வெளியே சென்று வரலாம் என்று கூறி தென்காசி சிற்றாற்று பாலத்துக்கு காதலியை மாதவன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு திடீரென பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி தனது நண்பர்கள் இருவரின் ஆசைக்கு இணங்குமாறு காதலியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே, காதலனின் நண்பர்கள் இருவரும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், காதலன் மாதவன் உள்பட 3 பேர் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாதவன், அவரது நண்பர் அந்தோணிராஜ் ஆகியோரை கைது செய்ததுடன், மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

காதலித்த பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 387

    0

    0