டிடிவி தினகரனுடன் இணைந்து பயணிப்பீர்களா…? தனது அரசியல் எதிர்காலத்தை ஒரே வார்த்தையில் சொன்ன ஓபிஎஸ்..!!

Author: Babu Lakshmanan
16 March 2023, 10:02 pm

வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் பயணிப்பேன் என்றும், சசிகலாவை கூடிய விரைவில் சந்திக்க உள்ளதாக மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமானத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விக்கு, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வருகின்ற 20ஆம் தேதி தாக்கல் ஆக உள்ளது. தாக்கல் செய்த பின் எனது கருத்தை தெரிவிக்கிறேன், எனக் கூறினார்.

டிடிவி தினகரன் சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு? வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் பயணிப்பேன். சசிகலாவை கூடிய விரைவில் சந்திக்க உள்ளேன், என தெரிவித்தார்.

அதிமுக புதிய உறுப்பினர் அட்டை மற்றும் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு?, ஆரம்பத்தில் இருந்தே அவருடைய நடவடிக்கைகள் இன்று வரை சட்ட நீதிக்கு புறம்பானதாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.

நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், நாங்கள் மக்கள் தீர்ப்பை எதிர்கொண்டு சென்று கொண்டிருக்கிறோம் கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் புத்தி இல்லாதவர்கள், என்று சைகையில் பதில் அளித்தார்.

  • lokesh kanagaraj movie actor sri present fitness photo shocking fans லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…