சென்னை பத்மாவதி தாயார் கோவில் மகா கும்பாபிஷேகம் : கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்!!!
Author: Udayachandran RadhaKrishnan17 March 2023, 8:34 am
சென்னை, சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தானமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கிய இடத்தில் பத்மாவதி தாயார் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.10 கோடி மதிப்பில் கட்டி உள்ளது.
இந்த கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) மகா கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த 12-ந்தேதியில் இருந்து சிறப்பு பூஜைகளும், ஓமங்களும் நடைபெற்றது.
இன்று கோவில் விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து 10 மணி முதல் 11 மணி வரை பத்மாவதி தாயார்-சீனிவாசா திருக்கல்யாணம் நடக்கிறது.
11 மணி முதல் 11.30 மணி வரை ஆச்சர்யா, ரித்விக் பரிச்சார்கா மர்யாடா போன்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.