அவனை சூரசம்ஹாரம் செய்யணும்… காட்டமாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி!!

Author: Vignesh
17 March 2023, 11:37 am

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். தனது ஸ்டைல், நடிப்பு, திறமையால் உச்ச நடிகராக வலம் வருபவர்.

ஆரம்பத்தில் பஸ் கண்டெக்டராக வேலை பார்த்த அவர் சினிமாவில் கொடிக் கட்டி பறக்க ஆரம்பித்தார். பின்னர் நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் தங்கையான லதாவை திருமணம் செய்து ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்களும் உள்ளனர்.

rajini - updatenews360

இந்நிலையில், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் ஒருவரை கடுமையாக தாக்கி பேசிய நிகழ்வு நடந்துள்ளது. அதாவது கன்னடத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த அப்பு என்கிற திரைப்படத்தின் 100 வது நாள் விழா ஏற்பாட்டில், சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துக்கொண்டார்.

veerappan- updatenews360

அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது சந்தன கடத்தல் வீரப்பனை மிகவும் கடுமையாக தாக்கி பேசினார். வீரப்பன் போன்ற ஒரு ராட்ஷசனை தான் பார்த்ததே இல்லை என்றும், அவனை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். ரஜினிகாந்த் இப்படி எந்த மேடையிலும் பேசியது இல்லை. ஒருவரையும் புண்படுத்தி விடக்கூடாது என்பதில் ரஜினிகாந்த் கவனமாக இருக்க கூடியவர்.

veerappan- updatenews360

ஏன் ஏன்றால், இதற்கு பின்னால் ஒரு கதை உண்டு. வீரப்பன் ஒரு சமயம் நடிகர் ராஜ்குமாரை கடத்தி பல மாதங்கள் காட்டில் வைத்திருந்தார். அந்த சமயங்களில் அவரை காப்பாற்ற ரஜினிகாந்த் பல முயற்சிகளை எடுத்து வந்தார். நடிகர் புனித் ராஜ்குமாரின் தந்தையான நடிகர் ராஜ்குமாரை ரஜினிகாந்திற்கு மிகவும் பிடிக்கும். அவரின் மிகப்பெரும் ரசிகர் ரஜினிகாந்த் ஆவார்.

rajkumar-updatenews360

அந்த சமயத்தில் ரஜினிகாந்த் வீரப்பன் மீது கடும் கோபத்தில் இருந்தார். அதன் எதிர்ப்பாகவே அந்த மேடையில் அவர் வீரப்பனை கடுமையாக தாக்கி பேசி இருந்தார். மேலும், அதற்கு பிறகு வீரப்பன் இறந்தபோது கூட அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை ரஜினிகாந்த் புகழ்ந்தும் பேசி இருந்தார். அந்த அளவிற்கு வீரப்பன் மீது ரஜினிகாந்த் கோபத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

veerappan- updatenews360
  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 592

    2

    0