சரத்குமார் செய்த கேவலமான வேலையை நான் செய்ய மாட்டேன் : கோபத்தில் கொப்பளித்த இளம் பிரபலம்!!
Author: Vignesh17 March 2023, 12:30 pm
சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றது. இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்திருக்கின்றனர்.
இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. ஆனால், இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் தான் நடித்து மக்கள் மத்தியில் வைரல் ஆக்கி வருகிறார்கள். இது குறித்து சோசியல் மீடியாவிலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
இந்தநிலையில், ஆன்லைன்ரம்மி விளையாட்டின் விளம்பரத்திற்காக சரத்குமார் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வந்தது நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தற்போது, நடிகர் சென்ட்ராயன் தெரிவிக்கையில், தான் ரம்மி, மங்காத்தா போன்ற படங்களை தான் பார்த்து இருப்பதாகவும், ஆனால் சீட்டுகட்டு அறவே பிடிக்காது என்றும், இது போன்ற விளையாட்டில் தன்னை நடிக்க அழைத்தால் போக மாட்டேன் எனவும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி போக மாட்டேன் எனவும், மேலும் அந்த ரம்மி விளம்பரத்தை தான் பார்த்தது கூட கிடையாது என்று தெரிவித்துள்ளார்.