டியூசன் சென்டரில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரசு உதவி பெறும் பள்ளியின் கணித ஆசிரியர் கைது..!!

Author: Babu Lakshmanan
17 March 2023, 12:51 pm

நெல்லை ; டியூசன் சென்டரில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி பனிராஜ் என்பவரின் மகன் சகாய டெல்பின் ராஜ் (வயது 32). இவருக்கு திருமணமாகி 3 வயது குழ‌ந்தை உள்ளது. இவர் அப்பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும், வீட்டில் டியூசன் சென்டரும் நடத்தி வந்தார். அப்போது, டியூசனுக்கு வந்த மாணவி ஒருவரிடம் சகாய டெஸ்பின் ராஜ் பாலியல் தொல்லை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜென்சி போக்சோ சட்டத்தின் கீழ் சகாய டெம்பின் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, கணித ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 451

    0

    0