வெறும் கைகளில் சாக்கடையை சுத்தம் செய்த தூய்மை பணியாளர் ; சர்ச்சையில் சிக்கிய அய்யம்பேட்டை ஊராட்சி நிர்வாகம்!!

Author: Babu Lakshmanan
17 March 2023, 3:46 pm

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் ஊழியர் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணி செய்ததற்கு சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளர்.

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்களும் நூற்றுக்கணக்கான பட்டு கைத்தறி நெசவு ஆலைகளும் உள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள காரணத்தினாலும், பட்டுக்கு சேலை நெய்வதற்க்கு முன்னர் பட்டு நூல்களில் சாயம் பூசுவதாலும், அந்த தண்ணீர் எல்லாம் வேகவதி ஆற்றில் சென்று கலக்கின்றது.

அதனால், அவ்வப்போது கால்வாய்களில் கழிவு நீர் வெளியேறி டிரைனேஜ் பிரச்சனைகள் ஏற்படும். கடந்த வருடம் டிரைனேஜ் சுத்தம் செய்யும் போது சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கழிவுநீர் வெளியேறி வருவதால் ஆட்கள் மூலம் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை செய்யும் துப்புரவு ஊழியர்கள் பணியின் போது பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்கின்றனர்.

ஊராட்சியில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்வதற்கு போதிய இயந்திரம் எதுவும் இல்லாததால் ஆட்களை கொண்டே சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வாறு உள்ள நிலையில் கால்வாய்களை சுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் அய்யம்பேட்டை ஊராட்சி நிர்வாகம் அளிக்காதது மிகப் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…