வாரிசு நடிகையுடன் காதல்… குக் வித் கோமாளி பிரபலத்துக்கு அடிச்சுது ஜாக்பாட்!!

Author: Vignesh
17 March 2023, 5:45 pm

டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

varalakshmi - updatenews360

வரலட்சுமி சரத்குமார் அடுத்தடுத்து தற்போது பல படங்கள் பிசியாக நடித்து வரும் நிலையில், பிரபல நடிகர் மற்றும் குக் வித் பிரபலம் சந்தோஷ் பிரதாப்பை காதலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சந்தோஷ் பிரதாப் மற்றும் வரலட்சுமி இருவரும் சமீபத்தில் வெளியான கொன்றால் பாவம் படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் ஷூட்டிங்கில் போது இருவரும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  • ajith was the first choice for nandha movie இந்த பாலா படத்தில் முதலில் அஜித்தான் நடிக்கவேண்டியது! ஆனால் நான் கடவுள் இல்லை?