அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி… ரூ.44 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வெள்ளியின் விலையும் தாறுமாறாக உயர்வு..!!

Author: Babu Lakshmanan
18 March 2023, 10:02 am

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.

அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. குறிப்பாக, மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை பெரும்பாலும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 ரூபாய் உயர்ந்து 44,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.5,560க்கு விற்பனையானது.
அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 பைசா உயர்ந்து, 74.40 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ ரூ.1,300 அதிகரித்து 74,400 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

  • Sivakarthikeyan Dhanush in Party Dance Video சிவகார்த்திகேயனுடன் குத்தாட்டம்.. VIBE MODEல் தனுஷ்… : மாஸ் வீடியோ!
  • Views: - 379

    0

    0