தலைதூக்கிவிட்ட “டாடா” வெற்றி – சம்பளத்தை உயர்த்திய கவின்- எவ்வளவு தெரியுமா?

Author: Shree
18 March 2023, 10:59 am

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மக்களுக்கு அறிமுகமானவர் நடிகர் கவின் இவர் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு லாஸ்லியாவை ஒருதலையாக காதலித்து பிரிந்தார்.

பின்னர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த கவின் அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபுவின் உருவாக்கத்தில் டாடா படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து மெகா ஹிட் கொடுத்தார்.

கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் தன்னுடைய சம்பளத்தை ரூ. 1 கோடிக்கும் உயர்த்தியுள்ளாராம்.

அடுத்ததாக லாவின் பிரபல நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் அப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 711

    2

    0