ஹன்சிகாவுக்காக ரேட் பேசிய அம்மா.. இதுக்குமா டீல்.. நிமிடத்திற்கு இத்தனை லட்சமா..!

Author: Vignesh
18 March 2023, 8:00 pm

தமிழில் ‘எங்கேயும் காதல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. அதன் பிறகு பிரியாணி, மான் கராத்தே, சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சிம்புவுடன் காதலில் இருந்து பின் பிரிந்ததாலும் தன் மார்க்கெட்டை இழந்து வந்தார். அதன்பின் தன்னுடைய 50வது படமான மஹா படத்தில் சிம்புவை ஜோடியாக நடிக்க வைத்தும் ஓரளவிற்கு வெற்றியை கண்டார் ஹன்சிகா மோத்வானி.

hansika - updatenews360.jpg 2

இதனிடையே, நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

hansika motwani -updatenews360

திருமணத்திற்கு பிறகு ஹன்சிகா நடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், தற்போது 6 படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ஹன்சிகா தனது திருமண வீடியோவை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் திருமண வீடியோ பிப்ரவரி 10ம் தேதி டீசர் ஒன்று வெளியாகி உள்ளது.

hansika - updatenews360.jpg 4

லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் ஹன்சிகா – சோஹேல் கத்தூரியா ஜோடியின் திருமண வீடியோ வெளியாக உள்ளது. அந்த வீடியோவில் ஹன்சிகா, லவ் ஷாதி டிராமாவில் பல விசயங்களை பதிவு செய்திருந்தார்.

இதனிடையே, தன் தாய் மோனா மோத்வானி மருமகனின் குடும்பத்தினரிடம் ஒரு நிமிடத்திற்கு லட்சத்தில் ரேட் பேசியுள்ள சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

hansika motwani -updatenews360

அதாவது, ஹன்சிகாவின் கணவர் சோஹேல் விழாக்களுக்கு தாமதமாக வருவதை நிறுத்த புகார் செய்த நிலையில், திருமணத்திற்கு தாமதமாக வந்தால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன் என அந்த வீடியோவில் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ