லாரி – ஆம்னி வேன் நேருக்கு மோதி கோர விபத்து : குழந்தை உட்பட 6 பேர் உடல் நசுங்கி பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2023, 11:57 am

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலை மரகட்டைகள் ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து கரூர் சென்ற லாரியும், எடப்பாடியில் இருந்து திருச்சி வழியாக கும்பகோணம் நோக்கி சென்ற மினி வேணும் திருவாசி அருகே நேருக்கு நேர் மோதி விபத்து.

ஒன்பது பேர் மினி வேனில் பயணம் செய்துள்ளனர். ஒரு குழந்தை, பெண் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி. மூன்று பேர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

சம்பவ இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனால் மூன்று கிலோ மீட்டருக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

6 பேர் உயிரிழந்த இந்த விபத்துக்கு காரணமான அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.

  • Sun TV Serial வந்த வேகத்தில் ஜாக்பாட்… ஒரே சீரியலால் அத்தனை நடிகைகளையும் ஓரங்கட்டிய பிரபலம்!