தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு : அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan19 March 2023, 6:11 pm
திருச்சி பொன்மலை பட்டி 46-46 A பகுதிகளில் உள்ள பொதுமக்களிடத்தில் குறை கேட்டு மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பொதுமக்களிடத்தில் மனுக்களை பெற்று குறைகளை கேட்டு அறிந்தார்.
அதன்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு மனுக்களை அனுப்பி வைக்கும்படி பகுதி கிளை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த குறை தீர்க்கும் முகாமில் சாலை வசதி, சாக்கடை வசதி, மின்விளக்கு,தண்ணீர் வசதி, பட்டா வழங்குதல்,அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதில் கோட்டத் தலைவர் மதிவாணன், பகுதி செயலாளர் இ.எம். தர்மராஜ். வட்டச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பகுதி நிர்வாகிகள் வட்ட கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 20-21ல் சுமார் ஒருலட்சத்து இன்பத்தெட்டாயிரத்திற்கு மேற்பட்ட இடைநின்ற மாணவர்களை தேடி கண்டுபிடித்து 22-23பள்ளிகளின் சேர்த்துள்ளோம்.
தேர்வு எழுது பயப்படுகிற மாணவர்களுக்கு மோட்டிவேஷன் வகுப்புகள், ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களுக்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
கல்வியில் பின்தங்கிய மாவட்டம் இல்லாமல் அனைத்து மாவட்டங்களும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. முதலமைச்சர உத்தரவுபடி அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து ஜூம் மீட்டிங் மூலமாக கருத்துக்களை கேட்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு நானே நேரடியாக சென்றுள்ளேன். அங்கு தேர்வு எழுதாத மாணவர்களின் பெற்றோர்களை ஆசிரியர்கள் தொடர்புகொண்டு தேர்வுக்கு மாணவர்களை அனுப்பி வையுங்கள்.
எதற்காக அவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற காரணத்தையும் கேட்கச் சொல்லி உள்ளோம். தேர்வுக்கு வராத மாணவர்களாக இருந்தாலும் சரி, சரியாக எழுதவில்லை என்றும் சொல்லும் மாணவர்களுக்கு சப்ளிமென்ட்ரி தேர்வு ஜூன் அல்லது ஜூலை மாதம் நடக்கும் பொழுது இந்த மாணவர்களை ஒரு மாதத்தில் சிறப்பு வகுப்புகள் எடுத்து அதே பள்ளியில் வழங்கப்பட்டு உடனடியாக அவர்கள் தேர்வு எழுதும் வைக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளோம் என தெரிவித்தார்.