வேற வழி தெரியல ஆத்தா.. மார்க்கெட் குறைந்ததால் மீண்டும் ப்ளே பாய் நடிகருடன் இணைந்த நயன்தாரா!!
Author: Vignesh20 March 2023, 5:15 pm
விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தில் விலகியதில் இருந்தே அதற்கு சமந்தமானவர்கள் மீது நயன்தாரா செம கடுப்பில் இருக்கிறார். இதனால் கணவருக்கு வெற்றி வாய்ப்புகள் அமைத்து கொடுக்கிறாம்.
அதன்படி பிரதீப் ரங்கநாதனை இயக்கவும், கமல் ஹாசன் தயாரிப்பில் இயக்கவும் விக்னேஷ் சிவனுக்கு யோசனை கொடுத்து அதன் வேளைகளில் கணவரை மும்முரமாக இறங்க செய்துவிட்டாராம்.
இதனிடையே ஜவான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அங்கு பாலிவுட் இளம் நடிகர் ஒருவரை கணவரின் படத்தில் நடிக்க கதை கூறி சம்மதம் வாங்கிவிட்டாராம். அந்த படத்தை நயன்தாரா ரெளடி பிச்சர்ஸ் மூலம் தயாரிக்கவுள்ளாராம். ஆக, அவமானப்படுத்தியவர்கள் முன் கணவரை தலைமிர்ந்து நிற்க வைக்க நயன்தாரா போராடி வருகிறார்.
இதனை தொடர்ந்து, நயன்தாரா அடுத்ததாக ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, நயன்தாரா 75 படத்தில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
மேலும், இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்க்கு முன் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நயன்தாரா – ஜெய் – சத்யராஜ் இணைந்து நடித்திருந்த நிலையில், மீண்டும் அதே வெற்றி கூட்டணி நயன்தாரா 75வது படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.