பொன்னியின் செல்வன் 2 ‘அக நக’ பாடல் ரிலீஸ் – வீடியோ இதோ!

Author: Shree
20 March 2023, 6:55 pm

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி சரித்திர வெற்றி படைத்தது. அதையடுத்து இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. லைக்கா தயாரிக்கும் இப்படத்தின் முதல் சிங்கிளாக ‘அக நக’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாடகர் சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ள இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் வரிகள் எழுதியுள்ளார்..

வந்தியத்தேவன் கார்த்தி, குந்தவி த்ரிஷா ரொமான்டிக் பாடலான இது தற்போது வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!