தியேட்டரில் டிக்கெட் விற்ற நிவேதா பெத்துராஜ் – நிமிடத்தில் ரொம்பி வழிந்த கல்லா!
Author: Shree21 March 2023, 4:55 pm
அழகிய நடிகையான நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க அடுத்தடுத்து ஹிட் கொடுப்பார் என பார்த்தால் தொடர் தோல்வியால் சறுக்கலை சந்தித்து மார்க்கெட் இல்லாமல் போனார்.
இதனால் தெலுங்கு பக்கம் செல்ல அங்கு தொட்டதெல்லாம் ஹிட் அடித்து ராசியான நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். ஆம், மெண்டல் மதிலோ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன் பிறகு சித்ரலஹரி, அலவைகுந்தபுரமுலு, ரெட் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
தற்போது தஸ் கா தம்கி என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை திரைக்கு வரவிருக்கிறது. இதன் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் அவர் தற்போது திரையரங்கில் ஹீரோவுடன் சேர்ந்து டிக்கெட் விற்றுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஓடிவந்து கூட்டம் கூட்டமாக டிக்கெட் வாங்கியுள்ளனர். இதனால் சில நிமிடங்களில் கலெக்ஷ்ன் அள்ளிவிட்டார்களாம்.