2024 தேர்தலில் பாஜக தனித்து போட்டியா? பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2023, 2:24 pm

திருநெல்வேலி அருகே ஆனந்தபுரம் பகுதியில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள சமுதாய நல கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைப்பெற்றது.

இதில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜு, திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாவது:- நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிப்பது, தாமிரபரணியின் குறுக்கே தடுப்பணைகள் அமைப்பது தொடர்பாக பட்ஜெட் தொடரில் கேள்வி எழுப்ப இருப்பதாக தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் அதிமுக நீடித்து வருவதாகவும், எந்த தலைவர்களுக்கும் இடையேயும் பிரச்சனை ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தேர்தல் வரும் போது பிரச்சனை உருவாகலாம், ஆனால் வேட்பாளர் அறிவித்த பின் அதுவும் நயினார் என அறிவித்த பின்னர் கட்சியினர் இணைந்து வேலை செய்வார்கள் என தெரிவித்தார்.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?